தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பணியிட மாற்றதிற்கு காத்திருக்கும் எஸ்.ஐ.,க்கள்

பணியிட மாற்றதிற்கு காத்திருக்கும் எஸ்.ஐ.,க்கள்

பணியிட மாற்றதிற்கு காத்திருக்கும் எஸ்.ஐ.,க்கள்


ADDED : அக் 30, 2024 06:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2024 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

-சென்னை:சென்னை புறநகரில் உள்ள காவல்நிலையங்களில் பணிபுரியும் 45 க்கும் மேற்பட்ட சப் -இன்ஸ்பெக்டர்கள், விருப்ப பணியிடம் மாற்றம் கோரி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்றனர்.

சென்னை காவல் மூன்றாக பிரிக்கப்பட்டு ஆவடி, தாம்பரம் ஆணையரகங்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவோரிடம், விருப்ப பணியிட மாற்ற விண்ணப்பம் பெறப்பட்டு, இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், மூன்று ஆணையரங்களில் உள்ள, காவலர்கள் முதல் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை விருப்ப பணியிடமாற்றம் கோரி விண்ணப்பித்திருந்தனர். பலர் பணியிட மாற்றம் பெற்றனர். ஆனால், மூன்று ஆணையரகத்திலும் விருப்ப பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்திருந்த, 45க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு சென்னை ஆணையரகத்தில் மட்டும் இடமாற்றத்திற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது. பின், ஆறு மாதங்களுக்கு முன் விருப்ப கோரிக்கை மனு பெறப்பட்டது. அதன் பிறகு, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணியிடமாற்றம் கோரிக்கை விண்ணப்பித்தோரின் மனுக்களை டி.ஜி.பி., பரிசீலித்து தீபாவளி பரிசாக விருப்ப பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்ற எதிர்ப்பாப்பு, சப் இன்ஸ்பெக்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us