/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியை வெட்டிய அக்கா கணவர் கைது
/
சிறுமியை வெட்டிய அக்கா கணவர் கைது
ADDED : நவ 22, 2024 12:26 AM

அயனாவரம்,பட்டப்பகலில் சிறுமியையும், அவரது காதலனையும் வெட்டிய, அவரது அக்கா கணவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 19ம் தேதி, அயனாவரம், கொன்னுார் நெடுஞ்சாலை, ஜாயின்ட் ஆபிஸ் அருகே நின்ற சிறுமியையும், அவரது காதலனையும், ஒருவர் பட்டாக் கத்தியால் வெட்டிய காட்சிகள், சமூக வலைத்தளத்தில் பரவியது.
இதுகுறித்து, அயனாவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, சிறுமியை கத்தியால் வெட்டியவர், புளியந்தோப்பு கே.பி.பார்க்கை சேர்ந்த சந்தோஷ், 25, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், மனைவியின் தங்கையான 17 வயது சிறுமி, வில்லிவாக்த்தை சேர்ந்த மணிகண்டன், 24, என்பவரை காதலிப்பதால், குடும்பத்தில் பிரச்னை இருந்துள்ளது.
இருந்தும், சிறுமியுடன், மணிகண்டன் இருப்பதை பார்த்த ஆத்திரத்தில், தாக்கியதும் தெரிய வந்தது. கைதான சந்தோஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார்.
சந்தோஷ் மீது, 13 குற்ற வழக்குகள் உள்ளன. இருமுறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றுள்ளார்.