/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாசர்பாடியில் உள்ளிருப்பு போராட்டம்
/
வியாசர்பாடியில் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 15, 2025 12:38 AM
எம்.கே.பி.நகர், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய மக்கள், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய குடியிருப்பு, 'டிடி' பிளாக்கில், நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன.
இக்குடியிருப்பு பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், 'சிசிடிவி' கேமராக்களை அமைக்க வேண்டும்; சங்க தேர்தலை உடனே நடத்த வேண்டும்; டிடி பிளாக்கில் பழுதான லிப்டுகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் நேற்று .....................உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார், பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தி, 30 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.