ADDED : ஆக 27, 2026 09:43 PM
அ நிறம் | அளவு
சிட்லப்பாக்கம்: சிட்லப்பாக்கத்தில் உள்ள பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சிட்லப்பாக்கத்தில், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் திருவேங்கடம், சக்கரபாணி ஆகியோர் தலைமையில், 10 பேர் கொண்ட குழு, நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். சோதனை நிறைவடைந்த பிறகே முக்கிய ஆவணங்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விபரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
