/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பெரியபுராண வாழ்வியல் நெறிகளை கடைப்பிடித்தால் மனநிறைவு கிடைக்கும்' சிவபுரம் ஆதீனம் பேச்சு
/
'பெரியபுராண வாழ்வியல் நெறிகளை கடைப்பிடித்தால் மனநிறைவு கிடைக்கும்' சிவபுரம் ஆதீனம் பேச்சு
'பெரியபுராண வாழ்வியல் நெறிகளை கடைப்பிடித்தால் மனநிறைவு கிடைக்கும்' சிவபுரம் ஆதீனம் பேச்சு
'பெரியபுராண வாழ்வியல் நெறிகளை கடைப்பிடித்தால் மனநிறைவு கிடைக்கும்' சிவபுரம் ஆதீனம் பேச்சு
ADDED : ஜூலை 25, 2025 12:28 AM

சென்னை :''பெரிய புராணத்தில் உள்ள வாழ்வியல் நெறிகளை கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்க்கை மனநிறைவாக இருப்பதுடன், பிறரையும் இன்முகத்தோடு அணுக வைக்கும்,'' என, திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் திருநா வுக்கரசு தேசிக பரமாச்சாரி ய சுவாமிகள் கூறினார்.
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில், 33ம் ஆண்டு, தெய்வச் சேக்கிழார் விழா, திருவான்மியூரில் நேற்று துவங்கியது. இதில், சிவாலயம் வெளியீட்டில், ரேகா மணி எழுதிய 'சேக்கிழார் வழியில் அன்புசெய் அடியார்கள்' என்ற நுால் வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், நுாலை வெளியிட்டு பேசியதாவது:
பெரிய புராணத்தில், நாயன்மார்கள் குறித்து பல தகவல்கள் உள்ளன. அதை அனைவரும் அறிந்திருப்பது அவசியம். சேக்கிழார் வரலாறு, திருப்பணி, பாடல்கள் அழகியலோடு படைக்கப்பட்டு உள்ளன.
பெரிய புராணத்தில் உள்ள வாழ்வியல் நெறிகளை கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்க்கை மனநிறைவாக இருப்பதுடன், பிறரையும் இன்முகத்தோடு அணுக வைக்கும்.
பெரியவர்கள் விட்டு சென்ற அரிய நுால்களை, கருத்துகள் மாறாமல் நவீனமாக படைக்க, இன்றைய தலைமுறைகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நுாலின் முதல் பிரதியை பெற்ற, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசியதாவது:
சைவத்தை போதிக்க சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சிறந்த தொண்டாற்றி வருகிறது. ஓலைச்சுவடியில் இருந்த சங்க இலங்கியங்களை, அச்சுப் பிரதியாக வெளிக்கொண்டு வருவதில் முன்னோடியாக உள்ளது.
பெரிய புராணத்தை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், நுாலாசிரியர் படைத்துள்ளார். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில், இந்த நுால் படைக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.