/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிவசுப்ரமணிய கோவில் கொடிமரம் பிரதிஷ்டை
/
சிவசுப்ரமணிய கோவில் கொடிமரம் பிரதிஷ்டை
ADDED : டிச 06, 2024 12:25 AM

ஆலந்துார், ஆலந்துார், ராமாபுரம் - வேளச்சேரி சாலை, சுப்பிரமணிய கோவில் தெரு சந்திப்பில் சிவசுப்ரமணிய சுவாமி கோவில்.
விநாயகர், காசி விஸ்வநாதர், அம்பாள், ஆஞ்சநேயர், நவக்கிரஹக சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, 2022 இறுதியில் பாலாலயம் செய்யப்பட்டது. பல லட்சம் ரூபாயில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.
தரை மட்டத்தில் கோவில் இருந்ததால், நன்கொடையாளர்கள் வாயிலாக ஜாக்கி வைத்து 5 அடி உயர்த்தி அமைக்கப்பட்டது. எட்டு லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில், தேக்கு மரத்திலான கொடிமரம் பிரதிஷ்டை, நேற்று காலை நடந்தது. இதற்கான பலிபீடம், கொடிமர செப்புத்தகடுகள் பதிக்கும் பணி நடக்கும் எனவும், திருப்பணிகள் முடித்து அடுத்தாண்டு துவக்கத்தில் மஹா கும்பாபிஷேகம் நடத்தவுள்ளதாகவும், கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.