/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளைஞரை கடத்தி சென்று தாக்கிய ஆறு பேர் கைது
/
இளைஞரை கடத்தி சென்று தாக்கிய ஆறு பேர் கைது
ADDED : ஜூலை 15, 2025 12:31 AM
படப்பை காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தி சென்று சரமாரியாக தாக்கிய ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 24. இவர், படப்பை அருகே தங்கி ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
படப்பை அருகே நரியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 18. இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் கருப்பசாமியுடன் பழகி வந்தார்.
இந்த நிலையில், அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை கருப்பசாமி தன் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் பதிவு செய்தார். இதை அறிந்த சதிஷ், கருப்பசாமியை தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் நண்பர்களுடன் சேர்ந்து கருப்பசாமியை ஆட்டோவில் கடத்திய சதிஷ், அவரை சரமாரியாக தாக்கி, படப்பை அருகே இறக்கி விட்டு சென்றார்.
இது குறித்த புகாரையடுத்து விசாரித்த மணிமங்கலம் போலீசார், சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஆறு பேரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.