UPDATED : நவ 11, 2026 07:05 PM
ADDED : நவ 11, 2026 07:02 PM
தாம்பரம்: பெருங்களத்துார் பேருந்து நிலையத்தில் முகமது ஹூசைன், 23, என்பவரை கத்தியால் தாக்கி, 46 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த 25 – 31 வயதுடைய ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சியைச் சேர்ந்த முசமது ஹூசைன் என்பவர், 28, என்பவர், 46 கிலோ வெள்ளி பொருட்களுடன், கடந்த 8ம் தேதி பெருங்களத்துார் பேருந்து நிலையத்திற்கு வந்தார்.
அங்கு மர்ம நபர்கள், கத்தியால் அவரது தலையில் வெட்டி, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்து, கடலுார் மாவட்டம், பரங்கிபேட்டை பகுதியில் பதுங்கியிருந்த சமீர், 34, ரிஸ்வான், 27, இஸ்மாயில், 30, சாதிக் பாஷா, 31, மன்ஷா, 25, லாரன்ஸ், 28, ஆகிய ஆறு பேரை, நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 46 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட ‘மாருதி டிசையர், டெயோட்டோ எட்டியாஸ்’ கார்கள், ‘சுசுகி’ இருசக்கர வாகனங்களை, பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக, ஜமாலுதீன், சாகுல் ஹமீது ஆகிய இருவரை, பீர்க்கன்காரணை போலீசார் தேடி வருகின்றனர்.
