தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் திறன்மேம்பாடு பயிற்சி

 பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் திறன்மேம்பாடு பயிற்சி

 பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் திறன்மேம்பாடு பயிற்சி


ADDED : ஏப் 02, 2026 08:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 08:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி., சார்பில் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.

சென்னை ஐ.ஐ.டி., பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மற்றும் போத் பிரிட்ஜ் கல்வி அமைப்பு இணைந்து, பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவியர், ஆசிரியர்களுக்கு கோடை கால திறன் பயிற்சிகளை அறிமுகம் செய்துள்ளன.

இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் அதிகாரி, பாலமுரளி சங்கர் கூறியதாவது:

பாரம்பரிய கல்விக்கும், நிஜவாழ்க்கை தேவைகளுக்கும் இடையேயான, இடைவெளியை நிரப்பிடும் வகையில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், ஆசிரியர்களுக்கு கோடைகால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. சைபர் பாதுகாப்பு, தொழில்முனைவு, நிதி மேலாண்மை ஆகியவை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, படைப்பாற்றல், விமர்சன சிந்தனைகளை வளர்க்க, பல்வேறு பாடங்கள் வழங்கப்பட உள்ளன. ஆசிரியர்களுக்கு, வகுப்பறை கற்பித்தல் திறன் மேம்பாடு, மாணவர்களை ஊக்கப்படுத்தும் திறன் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சிகள் ஜூன் மாதம் வரை நடக்கும். இதற்காக, https://bodhbridge.iitmpravartak.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us