/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராயபுரத்தில் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்
/
ராயபுரத்தில் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்
ராயபுரத்தில் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்
ராயபுரத்தில் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்
ADDED : ஜூன் 28, 2025 04:11 AM

ராயபுரம்:ராயபுரத்தில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை மேயர் பிரியா திறந்து வைத்தார்.
பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினி உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள், இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இதற்காக 15 மண்டலங்களிலும், தலா 50 லட்சம் ரூபாய் என, 7.50 கோடி ரூபாய் செலவில், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில், ராயபுரம் மண்டலம், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையத்தை, மேயர் பிரியா நேற்று திறந்து வைத்து, மகளிருக்கு தையல் பயிற்சிக்கான பொருள்களின் தொகுப்பை வழங்கினார்.
நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.