/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பழங்குடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
பழங்குடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : பிப் 15, 2026 05:57 AM
சென்னை: பழங்குடியினர் இளைஞர்கள், திறன் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இந்த பயிற்சியில் உலகத்தர உணவு சேவை, சுற்றுலா திறன், உயர் தொழில்நுட்ப ஏ.ஐ., போன்றவற்றுக்கு, 18 முதல் 25 வயது வரை உள்ள பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.
ஆடை வடிவமைப்பு, அழகு கலை போன்ற பயிற்சிக்கு, 18 முதல் 40 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலமான 3 மாதங்கள் முடிந்ததும், வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர், www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விடுதி, உணவுக்கான கட்டணத்தை, தாட்கோ வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

