/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெதுவாக நடக்கும் மெட்ரோ ரயில் பணி 1,000 வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
/
மெதுவாக நடக்கும் மெட்ரோ ரயில் பணி 1,000 வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
மெதுவாக நடக்கும் மெட்ரோ ரயில் பணி 1,000 வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
மெதுவாக நடக்கும் மெட்ரோ ரயில் பணி 1,000 வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
ADDED : பிப் 22, 2024 12:38 AM
புழுதிவாக்கம், சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்ட பணிகள், புழுதிவாக்கம், உள்ளகரம் பகுதிகளை உள்ளடக்கிய பிரதான சாலையில், 2022ல் துவங்கப்பட்டன.
இதற்காக, ராட்சத துாண்கள் அமைக்க, சாலை நடுவே இரும்பு தகடுகளால், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, 2022, மே 2ல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
இதனால், அந்த வழித்தடத்தின் இருபுறமும் கடைகளின் வியாபாரம் தடைபட்டது. 1,000க்கும் மேற்பட்ட வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
வணிகர் சங்கத்தின் கிருஷ்ணகுமார் கூறியதாவது:
மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணி மந்தகதியில் நடந்ததால், விரைந்து முடிக்கக் கோரி, 2023, மார்ச் 20ல், வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அப்போது, சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை அகற்றினோம். போலீசார், உயர் அதிகாரிகள் நேரில் வந்து, ஆறு மாதங்களுக்குள் பணிகள் முடித்து, போக்குவரத்து மீண்டும் பழையபடி திரும்பும் என, உத்தரவாதம் அளித்தனர்.
அவர்கள் கூறியபடி, பணிகள் விரைந்து நடக்கவில்லை. இதனால், வியாபாரத்தை முற்றிலும் இழந்த பலர், கடன் வாங்கி குடும்பத்தை காப்பாற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வளர்ச்சிப் பணிகள் நல்லதுதான். அதேநேரத்தில், மக்களை பாதிக்காத வகையில் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகை, வங்கிக் கடன் உள்ளிட்ட உதவியை சம்பந்தப்பட்ட துறை உருவாக்கித் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.