தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சி

சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சி

சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சி


ADDED : மே 02, 2025 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,

சாலிகிராமம், வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருபவர் அமுதா, 28. பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் 'கயல்' தொடரில், துணை நடிகையாக நடித்து வருகிறார்.

குடும்ப தகராறு காரணமாக, கணவர் சக்தி பிரபு அவரை பிரிந்து, ஆவடியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அமுதா, கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திவரத்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.

இதுகுறித்து, அவரது தோழி கிரணிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிரண், தற்கொலைக்கு முயன்ற அமுதாவை மீட்டு, விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கு, ஆபத்தான நிலையில், அமுதா சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us