/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஸ்டார்ட்அப்'களுக்கு சலுகை 6,000 பேருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
/
'ஸ்டார்ட்அப்'களுக்கு சலுகை 6,000 பேருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
'ஸ்டார்ட்அப்'களுக்கு சலுகை 6,000 பேருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
'ஸ்டார்ட்அப்'களுக்கு சலுகை 6,000 பேருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
ADDED : ஜூன் 14, 2025 06:29 AM
சென்னை: தமிழகத்தில், 10,800 'ஸ்டார்ட்அப்' எனப்படும், புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை, தகவல் தொழில்நுட்பம், மின் வாகனம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் தொழில்களை துவங்கிஉள்ளன.
பல நிறுவனங்கள், நிறுவனத்தின் இணையதளம் உருவாக்கம், சேவை தொடர்பான மென்பொருள் உருவாக்கம், வருமான வரி தாக்கல், சட்ட ஆலோசனை உள்ளிட்ட ஆரம்ப கால செலவுகளுக்கு சிரமப்படுகின்றன.
எனவே, இந்த சேவைகளை, 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள், குறைந்த கட்டணத்தில் பெறுவதற்காக, சிறப்பு சலுகை தொகுப்புகள் அடங்கிய, 'ஸ்மார்ட்' கார்டை, தமிழக அரசின், 'ஸ்டார்ட்அப் டி.என்.,' வழங்குகிறது.
இதற்காக, நிதி மற்றும் சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்கள், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த, 200 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புத்தொழில் நிறுவனங்கள், வருமான வரி தாக்கலை, நிதி ஆலோசனை நிறுவனங்கள் உதவியுடன் சமர்ப்பிக்கின்றன. இதற்கான செலவை, ஸ்மார்ட் கார்டில் சலுகை விலையில் வழங்க, ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களிடம் இருந்து, குறைந்த கட்டணத்தில் பெறலாம்.
இதேபோல, பல்வேறு சேவைகளை, 20 - 30 சதவீத தள்ளுபடி விலையில் பெறலாம். இந்த கார்டை வாங்க பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. கடந்த ஆண்டு இத்திட்டம் துவங்கியதில் இருந்து.
இதுவரை, 6,000 நிறுவனங்கள் சலுகை தொகுப்பு அடங்கிய, 'ஸ்மார்ட் கார்டை' பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.