ADDED : மே 27, 2025 12:19 AM

ஆவடி, திருமுல்லைவாயில், வடுகர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன், 50. இவர், செங்குன்றத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் தவசி, 20; டிப்ளமா முதலாமாண்டு மாணவர்.
இவர், பாலவேடு டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில், நேற்று முன்தினம் மாலை விளையாடுவதற்காக சென்றார். பின், இரவு தன் 'ஹீரோ ஸ்ப்ளெண்டர்' பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
ஆவடி, பாலவேடு அருகே சென்றபோது, 'பைக்' முன்பாகத்தில் பதுங்கி இருந்த கட்டுவிரியன் பாம்பு, அவரது இடது கை நடு விரலில் தீண்டியது. அதிர்ச்சியில் தவசி, பைக்குடன் சாலையில் விழுந்துள்ளார்.
அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, பைக்கில் பதுங்கி இருந்த பாம்பை வெளியே விரட்டினர். தகவலறிந்து வந்த அவரது நண்பர்கள், அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
