ADDED : செப் 20, 2026 03:10 AM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னை பட்டாபிராம், கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் ராஜ்குமார். இவரது வீட்டில் பாம்புத்தாரா பறவை நேற்று தஞ்சம் புகுந்தது.
பறவையின் இறக்கையில் லேசான காயமடைந்து காணப்பட்டது. இது குறித்து, தீயணைப்பு நிலையத்திற்கு கண்ணன் தகவல் தெரிவித்தார்.
ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனர் ரீகன் சென்று, பாம்புத்தாரா பறவையை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து, அருகில் உள்ள நீர்நிலையில் விடுவித்தார்.
