ADDED : பிப் 09, 2025 09:42 PM
சென்னை:'சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று காலை அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. அடுத்து வரும் நாட்களிலும், லேசான பனிமூட்டம் தொடரும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், வறண்ட வானிலையே காணப்படுகிறது. பிப்., 15 வரை இதே நிலை தொடர வாய்ப்புள்ளது. வடக்கில் இருந்து வீசும் வாடை காற்று காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் காலை லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். கடந்த சில நாட்களாக லேசான பனி மூட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், காலை அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. இன்றும், நாளையும் பனிமூட்டம் தொடர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

