/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லண்டனில் பனிப்புயல் சென்னை விமானம் தாமதம்
/
லண்டனில் பனிப்புயல் சென்னை விமானம் தாமதம்
ADDED : ஜன 29, 2025 12:09 AM
சென்னை, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்து 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம், வழக்கமாக அதிகாலை 5:35 மணிக்கு சென்னை வந்து, இங்கிருந்து காலை 7:35 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் பனிப்புயல் வீசி வருவதால், 287 பயணியருடன் நேற்று புறப்பட்ட விமானம், மோசமான வானிலையால், மீண்டும் லண்டன் விமான நிலையத்திலே தரை இறக்கப்பட்டது. வானிலை சீரடைந்த பின், முற்பகல் 11:30 மணியளவில் சென்னைக்கு வந்து, பின், மதியம் 1:30 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.
இதனால், சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய 280 பயணியர், வேறுவழியின்றி ஆறு மணி நேரம் காத்திருந்து தவித்தனர்.