/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'யு - டர்ன்' இருப்பதை அறிய சோலார் விளக்குகள் பொருத்தம்
/
'யு - டர்ன்' இருப்பதை அறிய சோலார் விளக்குகள் பொருத்தம்
'யு - டர்ன்' இருப்பதை அறிய சோலார் விளக்குகள் பொருத்தம்
'யு - டர்ன்' இருப்பதை அறிய சோலார் விளக்குகள் பொருத்தம்
ADDED : ஜூலை 02, 2025 12:24 AM

சென்னை, சென்னையில், அண்ணா சாலை உள்ளிட்ட பல பிரதான சாலைகளில், ஆங்காங்கே யு - டர்ன் வழங்கப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் , யு - டர்ன் இருப்பதை அறியாமல், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினர்.
இதையடுத்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள், எங்கெல்லாம் யு - டர்ன் அமைக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் சோலார் எனும் சூரிய சக்தி மூலமாக இயங்கக்கூடிய எல்.இ.டி., விளக்குகள் உடைய கம்பங்களை அமைத்து வருகின்றனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக, 8.5 லட்சம் ரூபாய் செலவில், 13 இடங்களில் சோலார் மூலமாக இயங்கக்கூடிய எல்.இ.டி., விளக்குகள், கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில், மற்ற இடங்களிலும் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
அதேபோல், மின் வெட்டு நேரங்களில் போக்குவரத்து சிக்னல் தொடர்ந்து ஏழு மணி நேரம் வரை இயங்கும் வகையில் யு.பி.எஸ்., எனும் மின்சாரம் சேமிப்பு சாதனம் அமைக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக, வேப்பேரி, பூந்தமல்லி சாலை உட்பட 165 இடங்களில் சென்சார் மூலம் இயங்கும் வகையிலான சிக்னல் ஏற்படுத்தப்படுகிறது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், வாகன ஓட்டிகள் ஒருபுறத்திலிருந்து மற்றொருபுறத்திற்கு எந்தவித இடையூறும் இன்றி கடப்பதற்காகவும் இது பயனளிக்கும் என, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.