/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திடக்கழிவு மேலாண்மை கருத்து கேட்பு கூட்டம்
/
திடக்கழிவு மேலாண்மை கருத்து கேட்பு கூட்டம்
ADDED : மார் 21, 2025 12:25 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், நிலையான திடக்கழிவு மேலாண்மை பெருந்திட்டம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், நேற்று மாலை நடந்தது.
இதில், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் என, பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்றோர் கூறியதாவது:
குப்பையால் நீர்நிலைகள் நாசமடைவதற்கு மாநகராட்சியே காரணம். குப்பை சேகரிக்கும் வாகனங்களை, அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட வேண்டும்.
அப்போது தான், அந்த வாகனங்கள் எப்படி உள்ளன; குப்பை எப்படி சேகரிக்கப்படுகிறது; வாகனம் முறையாக வருகிறதா, சேகரிக்கப்படும் குப்பை எங்கு கொட்டப்படுகிறது என்பது தெரியும்.
ஆனால், அதிகாரிகள் நேரில் பார்வையிடுவதே இல்லை. இதுபோல் பல முறை கருத்து கேட்கப்பட்டுள்ளது.
ஆனால், பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. வார்டுகளில் தினசரி குப்பை எடுக்க வேண்டும்.
மரக்கழிவுகளை முறையாக எடுப்பதில்லை. அதை கையாளுவதற்கான இயந்திரங்கள் இல்லை. துாய்மை பணியில் ஈடுபடும் ஊழியர்கள், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றுகின்றனர். பணம் கொடுக்கும் இடங்களில் மட்டும் குப்பை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.