sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு தீர்வு

/

மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு தீர்வு

மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு தீர்வு

மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு தீர்வு


ADDED : ஏப் 22, 2025 12:34 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார், கொளத்துாரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனை, கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு, முதல் முறையாக முதுகு எலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளித்து, இரண்டே நாளில் அவரை நடக்க வைத்து, மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:

மாதவரத்தைச் சேர்ந்த சுகந்தி, 44, என்பவர், முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டார். சில தினங்களுக்கு முன், பெரியார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஹேமலதா கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தலைமை எலும்பு மருத்துவர் மகேஷ்ராம், தலைமை மயக்கவியல் மருத்துவர் மாதவகிருஷ்ணா மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபாகர் அடங்கிய குழுவினர், அதிநவீன முறையில் நுண்துளை வாயிலாக அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இதையடுத்து அவர், இரண்டே நாளில் நடக்க ஆரம்பித்துவிட்டார்.

அதேபோல், தியாகு, 37, என்பவருக்கு, ஆறு மாதங்களாக முதுகு பகுதியில் ஜவ்வு இறக்கம் ஏற்பட்டு, வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கும், இதே மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து, குணமடைய வைத்துள்ளனர். இந்த இரண்டு அறுவை சிகிச்சையும், அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது.

கொரட்டூர், வடக்கு பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரின் 4 வயது பெண் குழந்தை ஜஸ்லின், இடது மூக்கில் பிளாஸ்டிக் வடிவிலான சிறிய பட்டன் பூவை நுழைத்துக் கொண்டார்.

அதை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், பெற்றோர் பெரியார் அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர்.

காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் அரவிந்த், குழந்தையை பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை வாயிலாக, மூக்கில் இருந்த பிளாஸ்டிக் பூ அகற்றப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us