/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் தேங்கிய கழிவுநீர் பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
/
சாலையில் தேங்கிய கழிவுநீர் பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
சாலையில் தேங்கிய கழிவுநீர் பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
சாலையில் தேங்கிய கழிவுநீர் பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு
ADDED : நவ 23, 2024 12:51 AM

சூளைமேடு,
நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, சாலையோரத்தில் பாதாள சாக்கடையில் இருந்து பொங்கி, சாலையில் தேங்கிய கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.
சூளைமேடு பகுதியில் உள்ள சவுராஷ்டிரா நகரில், 10க்கு மேற்பட்ட தெருக்களில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
இதில், ஒன்றாவது தெருவில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிலையத்தை, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் வசிப்போரும் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையம் அமைந்துள்ள முதல் தெருவோரத்தில், பல நாட்களாக கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவியது.
குறிப்பாக, பாதாள சாக்கடை நிரம்புவதால், பாதாள சாக்கடை இயந்திர நுழைவு வழியில் இருந்து கழிவுநீர் பொங்கி, சாலையில் வழிந்தோடியது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கழிவுநீர் பொங்கும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, அப்பகுதி துாய்மைப்படுத்தப்பட்டது.