நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபைல்போன்
திருடர்களுக்கு
'குண்டாஸ்'
திருவல்லிக்கேணி:
கொளத்துாரைச் சேர்ந்தவர் சுந்தர்குமார், 38. கடந்த ஆக., 21ல், திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்துாரார் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல்போனை பறித்துச் சென்றனர். திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிந்து, லாக் நகரைச் சேர்ந்த சிவக்குமார், 20, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த லோகேஷ், 20, ஆகிய இருவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைதான இருவரும் நேற்று குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.