சிறுபான்மையினர் ஆணைய குழு கூட்டம்
: சென்னை: மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ அருண் தலைமையில், ஆணையக் குழு ஆய்வு கூட்டம், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 27ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்க உள்ளது என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
***
இலவச கண்புரை சிகிச்சை தேர்வு முகாம்
மடிப்பாக்கம்: காஞ்சிபுரம், வடக்கு ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியுடன் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாமை, வரும் 16ம் தேதி காலை 8:00 மணி முதல் மடிப்பாக்கம், கார்த்திகேயபுரம் 6வது தெருவில் உள்ள சமிதியில் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு, 97109 10542, 96266 12345 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
***
காவலர் குறைதீர் சிறப்பு முகாம்
சென்னை: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வரும் 11ம் தேதி காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்படும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில், ஜன, 1ம் தேதி முதல் அக், 31ம் தேதி வரை நடத்தப்பட்ட காவலர் குறைதீர் முகாமில் பெறப்பட்ட, 3,217 மனுக்களில், 3,213 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
தீர்வு காணப்படாதவர்களுக்கு மட்டும் வரும், 11ம் தேதி கமிஷனர் அலுவலகம், 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் சிறப்பு காவலர் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.

