/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சஸ்பெண்ட்' சிறை காவலர்களில் சிலருக்கு பணி வாய்ப்பு மறுப்பு அலைக்கழிக்கும் அதிகாரிகளால் அவதி
/
'சஸ்பெண்ட்' சிறை காவலர்களில் சிலருக்கு பணி வாய்ப்பு மறுப்பு அலைக்கழிக்கும் அதிகாரிகளால் அவதி
'சஸ்பெண்ட்' சிறை காவலர்களில் சிலருக்கு பணி வாய்ப்பு மறுப்பு அலைக்கழிக்கும் அதிகாரிகளால் அவதி
'சஸ்பெண்ட்' சிறை காவலர்களில் சிலருக்கு பணி வாய்ப்பு மறுப்பு அலைக்கழிக்கும் அதிகாரிகளால் அவதி
ADDED : ஜூலை 20, 2025 03:01 AM
சென்னை, பூந்தமல்லி கிளைச்சிறையில், மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டதால் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட 10 போலீசாரில் ஆறு பேர் மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில், இன்னும் நான்கு பேருக்கு பணி வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புலம்புகின்றனர்.
பூந்தமல்லி சிறையில், தமிழகம் முழுதும் உள்ள சிறை காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கடந்த டிசம்பரில், டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் திடீர் ஆய்வில், கைதிகள் பதுக்கி வைத்திருந்த மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது. அன்று பணியில் இருந்த 10 போலீசார் டிச., 11ல் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
பின், டி.ஜி.பி.,யிடம் தொடர் முறையீடு காரணமாக மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். சஸ்பெண்ட் ஆன அவர்களை, அவர்களின் சிறை கண்காணிப்பாளரே பணியில் சேர்த்துக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, கடந்த மாதமும், இம்மாதமும் ஏழு பேர் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், நெல்லை, கடலுார் மத்திய சிறையில் தலா இருவருக்கு இதுவரை பணி வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, 10 பேருக்கும் சேர்த்து உத்தரவிட்டனர். ஆனால், பணியில் சேர்க்க மட்டும் காலதாமதமாக உத்தரவிடுகின்றனர். நெல்லை, கடலுார் சிறை காவலர்களுக்கு இன்னும் ஏன் பணியிடம் ஒதுக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.
அவர்கள், டி.ஜி.பி., அலுவலகத்திற்கும், சிறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் ஏழு மாதங்களாக அலைந்து கொண்டிருக்கின்றனர். கண்காணிப்பாளர்களிடம் கேட்டால், 'டி.ஜி.பி.,யிடம் இருந்து உத்தரவு வரவில்லை' என்கின்றனர். டி.ஜி.பி., அலுவலகத்தில் கேட்டால், 'அது கண்காணிப்பாளர் வேலை' என, திருப்பி அனுப்புகின்றனர்.
ஏற்கனவே, இடமாற்றம், சஸ்பெண்ட் என மன அழுத்தத்திற்கு சிறை காவலர்கள் ஆளான நிலையில், தற்போது அவர்கள் குடும்பத்தினரும் பெரும் மன அழுத்தத்திற்குள்ளாகி உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் --