/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சில வரி - மாமூல் வாங்கிய ரவுடிகள் கைது
/
சில வரி - மாமூல் வாங்கிய ரவுடிகள் கைது
ADDED : செப் 09, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, காமராஜர் நகரைச் சேர்ந்த மணிகண்டனிடம் 500 ரூபாய் மிரட்டி பறித்த வழக்கில், வியாசர்பாடியைச் சேர்ந்த ஹரிஹரன், 24, என்ற ரவுடியை, செம்பியம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
அதேபோல் ஓட்டேரி, புளியந்தோப்பு பகுதியில் ரவுடியிசம் செய்து, மாமூல் கேட்டு பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததோடு, கஞ்சா விற்ற பட்டாளத்தைச் சேர்ந்த சஞ்சய், 18, என்பவரை, புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.
மேலும், கஞ்சா பதுக்கி விற்ற இவரது தாய் நதியா, சித்தி ஷீபா மற்றும் மனைவி மோனிஷா ஆகியோரை, போலீசார் தேடி வருகின்றனர்.