ADDED : அக் 08, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம், பாரதியார் நகரைச்
சேர்ந்தவர் ஆனந்தன், 49; பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். இவரது மகன் நவீன்குமார், 26. போதை பழக்கத்திற்கு அடிமையான இவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல், வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம், வீட்டில் அமர்ந்திருந்த ஆனந்தனை, நவீன்குமார் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த ஆனந்தன், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று இறந்தார்.
திருமுடிவாக்கம் போலீசார் நவீன்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்தனர்.