/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வி.ஐ.பி.,க்களுக்காக வளையும் அதிகாரிகள் குப்பை கிடங்காக மாறிய தெற்குமாட வீதி
/
வி.ஐ.பி.,க்களுக்காக வளையும் அதிகாரிகள் குப்பை கிடங்காக மாறிய தெற்குமாட வீதி
வி.ஐ.பி.,க்களுக்காக வளையும் அதிகாரிகள் குப்பை கிடங்காக மாறிய தெற்குமாட வீதி
வி.ஐ.பி.,க்களுக்காக வளையும் அதிகாரிகள் குப்பை கிடங்காக மாறிய தெற்குமாட வீதி
ADDED : ஏப் 08, 2025 01:22 AM

திருவான்மியூர், அடையாறு மண்டலம், 180வது வார்டு, திருவான்மியூர், ஷீ வார்டு சாலைகள், தெற்கு, வடக்கு, கிழக்கு மாடவீதிகளில், 15க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு, ஒவ்வொரு தெருவிலும், குப்பை தொட்டிகள் இருந்தன.
சில மாதங்களாக, ஷீ வார்டு தெருக்களில் உள்ள குப்பை தொட்டிகளை அகற்றி, தெற்கு மாட வீதியில் உள்ள மின்மாற்றியின் அருகே அவற்றை வைத்தனர்.
அதேபோல், வடக்கு, தெற்கு மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்ததால், அங்கிருந்த குப்பை தொட்டிகளும், தெற்கு மாட வீதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
அதனால், தற்போது இரண்டு தொட்டிகள் மட்டுமே இருக்க வேண்டிய இந்த வீதியில், 10க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் உள்ளன.
ஷீ வார்டு சாலைகள், வடக்கு, கிழக்கு வீதிகளில் சேரும் குப்பை அனைத்தும், இந்த வீதியில் வரிசையாக உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்படுவதால், அவை நிரம்பி வழிகின்றன.
இரவில், ஹோட்டல் உணவு கழிவு கொட்டப்படுகிறது. இதனால், துர்நாற்றத்தால் அப்பகுதிவாசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து, தெற்கு மாடவீதியில் வசிப்போர் கூறியதாவது:
வடக்கு, கிழக்கு மாடவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளில் பணத்தை பெற்று, அங்கிருந்த குப்பை தொட்டிகளை இங்கு மாற்றிவிட்டனர்.
ஷீ வார்டு சாலைகளில் வி.ஐ.பி.,க்கள் வசிப்பதால், அங்கிருந்த குப்பை தொட்டிகளும் இங்கு மாற்றப்பட்டு உள்ளன. அதனால், தெற்கு மாடவீதி குப்பை கிடங்காக மாறிவிட்டது.
அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உயர் அதிகாரிகள் தலையிட்டு, குப்பை தொட்டிகளை அகற்றி, அந்தந்த பகுதிகளில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

