/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' தெற்கு ரயில்வே வெற்றி
/
டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' தெற்கு ரயில்வே வெற்றி
ADDED : மார் 27, 2025 11:54 PM

சென்னை, டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், தெற்கு ரயில்வே அணி, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில், திருவல்லிக்கேணி சி.சி., அணியை தோற்கடித்தது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், நகரில் பல்வேறு இடங்களில் நடக்கின்றன.
அந்த வகையில், மூன்றாவது டிவிஷன் 'பி' மண்டல போட்டியில், தெற்கு ரயில்வே அணி, 50 ஓவர்களில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 250 ரன்களை அடித்தது. திருவல்லிக்கேணி வீரர் பிரணவ் குமார், ஐந்து விக்கெட் எடுத்து, 45 ரன்கள் கொடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த, திருவல்லிக்கேணி சி.சி., அணி, 49.2 ஓவர்கள் விளையாடி, ஆல் அவுட் ஆகி போராடி, 248 ரன்களை அடித்து அதிர்ச்சி தோல்வியடைந்தது.
அதேபோல், ரிசர்வ் வங்கி ஆர்.சி., அணி, 42.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 160 ரன்களை அடித்தது. எதிர் அணியின் வீரர் ஆஷிஷ், ஐந்து விக்கெட் எடுத்து, 30 ரன்கள் கொடுத்தார்.
அடுத்து பேட்டிங் செய்த அருணா சி.சி., அணி, 14.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து, 164 ரன்களை அடித்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், ஐ.சி.எப்., அணி, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 292 ரன்களை அடித்தது. அணியின் வீரர் சஞ்சய் 121 பந்துகளில் இரண்டு சிக்சர், ஒன்பது பவுண்டரியுடன், 112 ரன்களை அடித்தார்.
எதிர்த்து களமிறங்கிய, பெருங்கொளத்துார் சி.சி., அணி, 45.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 197 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 95 ரன்கள் வித்தியாசத்தில், ஐ.சி.எப்., அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்கின்றன.
***