/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென்மண்டல பல்கலை டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
/
தென்மண்டல பல்கலை டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
தென்மண்டல பல்கலை டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
தென்மண்டல பல்கலை டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., அணி 'சாம்பியன்'
ADDED : ஜன 01, 2024 01:34 AM
சென்னை:அகில இந்திய பல்கலை கூட்டமைப்பு சார்பில், தென் மாநில பல்கலை இடையிலான, டென்னிஸ் போட்டி, ஆந்திர மாநிலம், மசிலிபட்டினம், கிருஷ்ணா பல்கலையில், டிச., 27 முதல் 30 வரை நடந்தது.
தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, 80 பல்கலை அணிகள் பங்கேற்று, பலப்பரீட்சை நடத்தின. போட்டிகள் 'நாக் அவுட்' முறையில் நடந்தன.
இதில், துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்.ஆர்.எம்., தொழில்நுட்ப பல்கலை அணி வீரர்கள், கால் இறுதியில் தெலுங்கானாவின் உஸ்மானியா பல்கலை அணியை 3 - -0 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.
அடுத்து நடந்த அரை இறுதியில், வலுமிக்க கோவை பாரதியார் பல்கலை அணியை 3 - -1 என்ற செட் கணக்கில் வீழ்த்திய எஸ்.ஆர்.அணி வீரர்கள், பரபரப்பான இறுதி போட்டியில், ஆந்திர பல்கலை அணியை 3- - 0 என்ற நேர் செட்டில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.
இப்போட்டியில் வென்றதன் வாயிலாக, நாளை மறுதினம் ஜெய்ப்பூர், மணிபால் பல்கலையில் நடக்க உள்ள அகில இந்திய பல்கலை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க, எஸ்.ஆர்.எம்., அணியினர் தகுதி பெற்றனர்.