/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென்மேற்கு மண்டல ஜூடோ எஸ்.ஆர்.எம்., மாணவன் தங்கம்
/
தென்மேற்கு மண்டல ஜூடோ எஸ்.ஆர்.எம்., மாணவன் தங்கம்
ADDED : டிச 02, 2024 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இந்திய பல்கலைகள் சங்கம் மற்றும் எல்.என்.சி.டி., பல்கலை சார்பில், தென்மேற்கு மண்டல பல்கலை ஜூடோ போட்டிகள், மத்திய பிரதேசம், போபால் பகுதி பல்கலை வளாகத்தில், கடந்த 27ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
தென்மேற்கு மண்டல அளவில், 115 பல்கலைகளில் இருந்து, 550 வீரர்கள் போட்டியில் பங்கேற்று,திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், 60 கிலோ முதல் 100 கிலோவுக்கு மேல் வரை, தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில், சென்னை வடபழனிஎஸ்.ஆர்.எம்., மாணவர் ஆகாஷ்ராஜ், 60 கிலோவுக்குட்பட்ட எடை பிரிவில் பங்கேற்று, முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.