ADDED : ஆக 27, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
சென்னை: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு, தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு, நேற்று முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, பெங்களூரு, துாத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நாளை நடைபெற உள்ள கொடியேற்றத்தை முன்னிட்டு, இன்று சென்னையில் இருந்து 150 சிறப்பு பேருந்துகளும் 29ம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போல் அடுத்த மாதம் 8ம் தேதியும் சென்னை – வேளாங்கண்ணி மற்றும் வேளாங்கண்ணி –- சென்னைக்கு, 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என, போக்குவரத்து கழகம் நேற்று அறிவித்துள்ளது.
