/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : டிச 22, 2025 04:05 AM
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், நாளை மற்றும் நாளை மறுநாள், சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பலரும், சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
எனவே, தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், கிளாம்பாக்கத்தில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கு, நாளை 255; நாளை மறுநாள் 525 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், சென்னை கோயம்பேடில் இருந்து, திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு நகரங்களுக்கு, நாளை மற்றும் நாளை மறுதினம், 91 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்திலிருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பண்டிகை முடிந்து, சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு திரும்பும் வகையில், தேவையான எண்ணிக்கையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அரசு பேருந்துகளில் செல்ல, நாளை 20,107; நாளை மறுநாள் 21,206; 26ல் 7,578 பேர்; 27ல் 5,972 பேர்; 28ல் 14,256 பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்ய விரும்புவோர், 'www.tnstc.in' இணையதளம் வழியே, முன்பதிவு செய்யலாம்.

