/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல் டாக்டர் மீதான பாலியல் புகார் விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு
/
பல் டாக்டர் மீதான பாலியல் புகார் விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு
பல் டாக்டர் மீதான பாலியல் புகார் விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு
பல் டாக்டர் மீதான பாலியல் புகார் விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு
ADDED : அக் 28, 2025 01:01 AM
சென்னை: அரசு பல் மருத்துவ கல்லுாரி பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, சிறப்பு அதிகாரியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வர் அரவிந்த் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரியில் வாய் நோய்க்குறியியல் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்தவர் டாக்டர் ஐ.பொன்னையா.
இவர் மீது, முதுநிலை மருத்துவ மாணவியர், துறை சார்ந்த பெண் ஊழியர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதன்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதற்கிடையே, சென்னை மருத்துவ கல்லுாரி முதல்வர் தலைமையிலான மூவர் குழு விசாரித்து வந்ததில், பொன்னையா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. அந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவர் மீது, குற்ற குறிப்பாணை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, தன் தரப்பு விளக்கத்தையும் பொன்னையா அளித்துள்ளார். இது தொடர்பான மேல் விசாரணைக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதல்வர் அரவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழு ஒரு மாதத்தில் விசாரணை முடித்து, அரசிடம் இறுதி அறிக்கை அளிக்க உள்ளது.

