/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரத்தில் இன்று குறைதீர் சிறப்பு முகாம்
/
தாம்பரத்தில் இன்று குறைதீர் சிறப்பு முகாம்
ADDED : பிப் 13, 2025 12:28 AM
தாம்பரம்,தாம்பரம் மாநகராட்சியில், 2 மற்றும் 4வது மண்டலங்களில், இன்று மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடக்கிறது.
நான்காவது மண்டலத்தில் அடங்கிய, 32, 33, 49, 50 - 61 ஆகிய வார்டுகளுக்கு, மேற்கு தாம்பரம், அம்பேத்கர் திருமண மண்டபத்தில், மாலை 3:30 மணி முதல் 6:30 மணி வரை முகாம் நடக்கிறது.
இரண்டாவது மண்டலத்தில் அடங்கிய, 9, 13- 21, 24, 26 - 28 ஆகிய வார்டுகளுக்கு, மண்டல அலுவலகத்தில், காலை 10:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை முகாம் நடக்கிறது.
இதில், நகராட்சி நிர்வாகம், மின் வாரியம், வருவாய், மாற்றுத்திறனாளிகள் நலன், காவல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகள் பங்கேற்கின்றன.
முகாம்களில் பங்கேற்கும் மக்களின் கோரிக்கைகள் கணினியில் பதிவு செய்யப்படவுள்ளதால், அதற்கான அனைத்து ஆவணங்களையும் கொண்டுவர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.