/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4வது டிவிஷன் கிரிக்கெட் சோஷியல் சி.சி., அணி வெற்றி
/
4வது டிவிஷன் கிரிக்கெட் சோஷியல் சி.சி., அணி வெற்றி
4வது டிவிஷன் கிரிக்கெட் சோஷியல் சி.சி., அணி வெற்றி
4வது டிவிஷன் கிரிக்கெட் சோஷியல் சி.சி., அணி வெற்றி
ADDED : ஆக 29, 2025 12:15 AM
சென்னை, சென்னையில் நடக்கும் ஆடவருக்கான நான்காவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், சோஷியல் கிரிக்கெட் கிளப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆடவருக்கான நான்காவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி, சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அடையாறில் உள்ள செயின்ட் பேட்ரிக்ஸ் கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில், சோஷியல் கிரிக்கெட் கிளப் அணி, யங் மேன்ஸ் சங்க அணியை எதிர்த்து மோதியது.
இதில், 'டாஸ்' வென்ற யங் மேன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் தடுமாறினர். சிவராமகிருஷ்ணன், சாய் ராம் தலா 2 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
பின் வந்த கவுதமன், 33, மணிகண்டன், 39 ரன்கள் எடுத்து அணிக்கு சற்று ஆறுதல் அளித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக, அந்த அணி அணி 36.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அடுத்து களமிறங்கிய சோஷியல் கிரிக்கெட் கிளப் அணிக்கு, துவக்க ஆட்டக்காரரான பிரகாஷ், 51, ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். முடிவில், சோஷியல் கிரிக்கெட் கிளப் அணி 34.2 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.---