/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரி கிரிக்கெட்: ஆர்.கே.எம்., விவேகானந்தா அணி 'சாம்பியன்'
/
கல்லுாரி கிரிக்கெட்: ஆர்.கே.எம்., விவேகானந்தா அணி 'சாம்பியன்'
கல்லுாரி கிரிக்கெட்: ஆர்.கே.எம்., விவேகானந்தா அணி 'சாம்பியன்'
கல்லுாரி கிரிக்கெட்: ஆர்.கே.எம்., விவேகானந்தா அணி 'சாம்பியன்'
ADDED : ஆக 23, 2025 11:14 PM
சென்னை, கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், ஆர்.கே.எம்., விவேகானந்தா கல்லுாரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
எஸ்.ஆர்.எம்., பல்கலையின் நிறுவனர் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்தது.
இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
இதில் சென்னையின் ஆர்.கே.எம்., விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஏ.எம்.ஜெயின் கல்லுாரி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஜெயின் கல்லுாரி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களம் இறங்கிய விவேகானந்தா கல்லுாரி அணி, 16.5 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணிக்காக விக்னேஷ்வரன், 50 ரன்கள் குவித்தார்.
எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய ஜெயின் கல்லுாரி அணியால், விவேகானந்தா கல்லுாரி அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இதனால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். முடிவில் 16.3 ஓவர்களில் 100 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. அணி வீரர் ஜூதா 27 ரன்கள் அடித்து ஆறுதல் தந்தார். திரில் வெற்றி பெற்ற ஆர்.கே.எம்., விவேகானந்தா கல்லுாரி அணி, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

