/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி
ADDED : நவ 20, 2025 03:08 AM

சென்னை: உலக மாற்றுத்திறனாளி கள் தினத்தையொட்டி, சிறப்பு பள்ளி மாணவ - மாணவியருக்கு, மாநில அளவிலான, விளையாட்டுப் போட்டிகள், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று நடந்தன.
போட்டியில், கன்னியாகுமாரி, தஞ்சாவூர், திருச்சி உட்பட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 600 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்டப் பந்தயம் உட்பட 12 பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன.
நேற்று காலை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதி, போட்டிகளை துவக்கி வைத்தார்.
மாலையில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளி தினமான டிச., 3ல், முதல்வரால் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

