கபடி: 23 பள்ளி அணிகள் மோதல்
 சென்னை: பள்ளிக்கல்வித்துறையின் பாரதியார் தினம் மற்றும் சுதந்திர தின விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. இதில், 23 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.
மாணவருக்கான, 14 வயது பிரிவு காலிறுதி போட்டிகள் முடிவில், நெல்லை நாடார், ஆலந்துார் ஆதிதிராவிடர் அரசு பள்ளி, தண்டையார்பேட்டை டேனியல் தாமஸ் மற்றும் மயிலாப்பூர் கேசரி பள்ளி அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. மற்ற பிரிவுகளுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன.
தேசிய கால்பந்தில் சென்னை வீரர்கள்
 சென்னை: அகில இந்திய கால்பந்து சங்கம் சார்பில், ஆண்களுக்கு நடத்தப்படும் சப் - ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூரில், கடந்த 25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
இதில் பங்கேற்கும் தமிழக அணி, வரும் 3ம் தேதி மத்திய பிரதேச மாநில அணியை எதிர்கொள்கிறது.
தமிழக அணியில், சென்னை மண்டல வீரர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரைஹான், ரோஷன், புவன் ஆகிய வீரர்கள், தமிழக அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

