தேசிய கராத்தே போட்டி
சென்னை வீரர் தகுதி
சென்னை: தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் ஈரோடில் நடந்தன. இதில், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, செயின்ட் மேரிஸ் பள்ளி, 9-ம் வகுப்பு மாணவன் ஜீவா, 30 கிலோ எடை பிரிவில் முதல் பரிசு பெற்றார். இதன் மூலம், அடுத்தமாதம் நடக்க உள்ள, 69வது தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
கால்பந்து பயிற்சி
இன்று துவக்கம்
சென்னை: மகளிருக்கான தேசிய சப் - ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, ஆந்திர மாநிலத்தின் அனந்தபூரில், வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணியினருக்கான பயிற்சி முகாம், தமிழக கால்பந்து சங்கம் சார்பில், திண்டுக்கல்லில் இன்று துவங்கி, வரும் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

