ADDED : ஜன 23, 2026 05:22 AM

யு - 19 கிரிக்கெட் இன்று காலிறுதி
ராயப்பேட்டை: ரோட்டரி செரினிட்டி கோப்பை 'யு - 19' கிரிக்கெட் போட்டி லீக் சுற்றுகள் முடிவில், புதுார் அரசு பள்ளி, செயின்ட் ஜான்ஸ், செயின்ட் பீட்ஸ், டான் போஸ்கோ, பி.எஸ்.பி.பி., மில்லினியம், ஒமேகா, நுங்கம்பாக்கம் பி.எஸ்.பி.பி., ஜேப்பியார் ஆகிய எட்டு பள்ளி அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதி போட்டிகள் இன்று துவங்குகின்றன.
வாஸ்போ செஸ் இன்று துவக்கம்
நுங்கம்பாக்கம்: எம்.ஓ.பி., வைஷ்ணவ கல்லுாரி சார்பில், மகளிர் கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளுக்கு இடையிலான மாநில செஸ் போட்டி, 'வாஸ்போ' என்ற தலைப்பில், நுங்கம்பாக்கத்தில் இன்று துவங்குகிறது.
வில்வித்தை பயிற்றுநர் பணிக்கு அழைப்பு
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்,- சென்னை மாவட்டத்தில் விளையாட்டு இந்தியா மாவட்ட மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி மையத்திற்கு வில் வித்தை பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விபரங்களுக்கு, 74017 03480 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
