தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஸ்போர்ட்ஸ் கார்னர்


ADDED : பிப் 06, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச டென்னிஸ் தொடர்: 9ல் துவக்கம்

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், ஆடவருக்கான ஏ.டி.பி., சேலஞ்சர்ஸ் - 50 எனும் சர்வதேச டென்னிஸ் போட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில் வரும் 9ல் துவங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிரான்ஸ், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் போட்டியிட உள்ளனர். இதன் முதல் தகுதி சுற்றுகள் வரும் 8ல் துவங்குகின்றன. ஒற்றையர் மெயின் டிராவில் 32 வீரர்கள் மற்றும் இரட்டையர் பிரிவில் 16 அணிகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



---கல்லுாரிகள் கிரிக்கெட் : இன்று இறுதி போட்டி



கல்லுாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் பகுதியில் நடந்து வருகிறது. நேற்று காலை நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில், மார் கிரிகோரியோஸ் அணி முதலில் பேட்டிங் செய்து,19.3 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது.

இலக்கை துரத்திய ராமச்சந்திரா பல்கலை அணி, 19.4 ஓவர்களில் 134 ரன் களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், மார் கிரிகோரியோஸ் கல்லூரி அணி உறுதியான வெற்றியுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு அரையிறுதி போட்டியில், இந்து கல்லுாரி அணியை வீழ்த்தி ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அணி வெற்றி பெற்றது. இன்று இறுதி போட்டி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us