தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஸ்போர்ட்ஸ் கார்னர்

 ஸ்போர்ட்ஸ் கார்னர்

 ஸ்போர்ட்ஸ் கார்னர்


ADDED : பிப் 14, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 05:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஸ் போட்டியில் சிறுவர்கள் அசத்தல்

செ ங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், செங்கை மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, தாம்பரத்தில் உள்ள பிரின்ஸ் வெங்கடேஸ்வரா கலை கல்லுாரி வளாகத்தில் நடந்தது. 500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.

சிறுவர் 7 வயது பிரிவில், நிஹான் நிதிஷ், சிறுமியரில் அனிகா முதலிடங்களை கைப்பற்றினர். 11 வயது பிரிவில் சிறுவரில் லிஷாந்த், சிறுமியரில் சாத்விகா; 15 வயதில் சிறுவரில் சாய் அபினவ் குச்சிபோட்லா, சிறுமியரில் மிருணாளனி ஆகியோர் முதலிடங்களை வென்றனர். சிறுவர் 19 வயதில், சாய் கிருஷ்ணா, சிறுமியரில் பத்மினி ஆகியோர் வெற்றி பெற்றனர். முதலிரண்டு இடங்களை பிடித்தோர், மாநில போட்டியில் செங்கல்பட்டு அணிக்காக பங்கேற்க தகுதி பெற்றனர்.

எஸ்.ஆர்.எம்., அணி

கால்பந்தில் சாம்பியன்

பி .எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், மாநில அளவில் ஆடவருக்கான பவுண்டர் கோப்பை கால்பந்து போட்டி, சென்னை, வண்டலுாரில் உள்ள கிரசண்ட் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன.

இதன் அரையிறுதியில், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., அணி, 1 - 0 என்ற கோல் கணக்கில் நாசரேத் கல்லுாரியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியில் எஸ்.ஆர்.எம்., - அமெட் பல்கலை அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

மாநில தடகளம் முன்பதிவுக்கு அழைப்பு சென்னை: தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் இணைந்து, 3வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், வரும் 20ம் தேதி துவங்குகிறது. பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர் அணியாகவும், தனியாகவும் பங்கேற்கின்றனர். இதுவரை 1,200க்கு அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். 16ம் தேதியுடன் முன்பதிவு முடிகிறது. விருப்பமுள்ளோர் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு 93637 62812, 95661 98156 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் தெரிவித்துள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us