ADDED : மார் 12, 2026 05:15 AM

பனிமலர் கல்லுாரி
வாலிபாலில் வெற்றி
நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில், எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில், நேற்று முன்தினம் இரவு ஆடவருக்கான முதல் போட்டி நடந்தது.
இதில், சென்னை பனிமலர் அணி 25 - 23, 25 - 23 என்ற செட் கணக்கில், சென்னை ஜேப்பியார் கல்லுாரியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, 25 - 17, 25 - 17 என்ற செட் கணக்கில் கோவை கற்பகம் பல்கலையை வீழ்த்தியது.
மகளிருக்கான முதல் போட்டியில், சென்னை ஐ.சி.எப்., அணி, 25 - 18, 27 - 25 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., ஸ்பைக்கர் அணியை போராடி வென்றது.
பீச் வாலிபால் காலிறுதி
தமிழக அணி தகுதி
புதுச்சேரியில், 23வது தேசிய சீனியர் பீச் வாலிபால் போட்டி நடந்து வருகிறது. 15 அணிகளில், தமிழகத்தில் இருந்து இரு அணிகள் பங்கேற்றுள்ளன.
இதன், காலிறுதிக்கான தகுதி போட்டிகள், நேற்று முன்தினம் நடந்தது. இதில் கர்நாடக அணியை எதிர்த்து விளையாடிய தமிழகம் - 1 அணி, 21 - 10, 21 - 11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. தமிழகம் - 2 அணியும், தெலுங்கானாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
