தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஸ்போர்ட்ஸ் கார்னர்

 ஸ்போர்ட்ஸ் கார்னர்

 ஸ்போர்ட்ஸ் கார்னர்


ADDED : மார் 13, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சீனியர் கால்பந்து லீக்

தாவூத் அணி அபாரம்

சென்னை கால்பந்து சங்கம் சார்பில், ஆடவருக்கான சீனியர் லீக் கால்பந்து போட்டிகள், பெரியமேடு கண்ணப்பர் திடல் மைதானத்தில் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த போட்டியில், தமிழக காவல் துறை அணி, தாவூத் நினைவு அணியை எதிர்த்து மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், அசத்தலாக விளையாடிய தாவூத் அணி, 3 - 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

3வது டிவிஷன் கிரிக்கெட்

ஏப்., 1க்கு ஒத்திவைப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆறு டிவிஷன் போட்டிகள் நடத்தப்படும். கடந்த நவ., - டிச., மாதங்களில் சென்னையில் பெய்த மழையால் போட்டிகள் நிறுத்தப்பட்டு, கடந்த மாதம் துவங்கி, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

ஒரே நேரத்தில் அனைத்து போட்டிகளையும் நடத்துவதால், மைதானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், நான்கு, ஐந்து, ஆறாவது டிவிஷன் போட்டி, அடுத்த வாரத்தில் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து, முதல், இரண்டாவது டிவிஷன் போட்டி, இம்மாத இறுதியிலும், மூன்றாவது டிவிஷன் ஏப்., 1ம் தேதியும் துவங்க உள்ளதாக, கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய பீச் வாலிபால் போட்டி

பைனலில் தமிழக அணிகள்

இந்திய பீச் வாலிபால் சங்கம் சார்பில், 23வது சீனியர் தேசிய பீச் வாலிபால் போட்டி, புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதி போட்டிகள், நேற்று முன்தினம் இரவு நடந்தன.

ஆடவர் முதல் அரையிறுதி போட்டியில், தமிழக 1வது அணி, ஆந்திரா மாநில அணியை எதிர்த்தது. இதில் ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி, 27 - 25, 21 - 16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.

அடுத்த போட்டியில், தமிழக 2வது அணி, கோவா அணியை 21 - 18, 21 - 18 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

மகளிருக்கான அரையிறுதியில், தமிழக 1வது அணி, தெலுங்கானா அணியை எதிர்த்து மோதியது. இதில் அசத்திய தமிழக அணி, 21 - 17, 21 - 5 என்ற நேர் செட்டில் அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us