ADDED : ஆக 19, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமியின், ‘லீக் கம் நாக் அவுட்’ கிரிக்கெட் போட்டி, முகப்பேரில் உள்ள தனியார் கல்லுாரி வளாகத்தில் நடந்து வருகிறது. நான்கு அணிகள் எட்டு போட்டிகள் வீதம் மோதி வருகின்றன.
நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், பேட்டிங் செய்த ஹிட்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 196 ரன்கள் எடுத்தது. அணியின் வீரர் தமீம், 45 பந்துகளில் எட்டு பவுண்டரிகள், ஐந்து சிக்சர்களுடன், 81 ரன்கள் அடித்தார். அடுத்து களமிறங்கிய ஸ்கை கிங்ஸ் சி.சி., அணி, 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. இதனால் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஹிட்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.
