ADDED : ஆக 21, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
விநாயக மிஷன் ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலை சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான ‘யு – 16’ கிரிக்கெட் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், பையனுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த லீக் சுற்றில், நெல்லை நாடார் அணி, முதலில் பேட்டிங் செய்து, 27 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 130 ரன்கள் அடித்தது.
அடுத்து இறங்கிய ஒமேகா சி.பி.எஸ்.இ., அணி, 25 ஓவர்களில், ஆல் அவுட் ஆகி, 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. 35 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை நாடர் அணி வென்றது.
