ADDED : ஆக 25, 2026 03:31 PM
மண்டல செஸ்: லயோலா கல்லுாரி அபாரம்
சென்னை பல்கலையின் ‘ஏ’ மண்டல செஸ் போட்டி, கவுரிவாக்கத்தில் உள்ள பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
இப்போட்டியில், பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்று, தங்களது திறமையை வெளிப்படுத்தின. போட்டியின் முடிவில், லயோலா கல்லுாரி முதலிடத்தை பிடித்தது. குருநானக் கல்லுாரி 2-ம் இடத்தையும், போட்டியை நடத்திய பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லுாரி 3-ம் இடத்தையும் பெற்றன.
--------–––––––––––––––––––––
கிரிக்கெட்: ராமச்சந்திரா பள்ளி த்ரில் வெற்றி
பள்ளிகளுக்கு இடையே 16 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி, செங்கல்பட்டு, பையனுாரில் உள்ள விநாயக மிஷன் ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலையில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், பள்ளிக்கரணை மார்க் வித்யாலயா மற்றும் ராமச்சந்திரா பள்ளி அணிகள் எதிர்கொண்டன. முதலில் பேட் செய்த ராமச்சந்திரா பள்ளி, 24.2 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய மார்க் வித்யாலயா அணி, 25 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், ஆறு ரன்கள் வித்தியாசத்தில் ராமச்சந்திரா அணி த்ரில் வெற்றி பெற்றது.
