UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 05:46 PM

அ நிறம் | அளவு
கைப்பந்து: எம்.ஓ.பி., அணி ‘சாம்பியன்’
சென்னை பல்கலையின் ‘ஏ’ மண்டல மகளிர் ஹேண்ட்பால் எனும் கைப்பந்து போட்டி, பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லுாரியில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதன் இறுதி போட்டியில் டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அணியுடன் எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரி அணி மோதியது. இதில் 19 – 7 என்ற கோல் கணக்கில் வென்று, ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது. ஸ்ரீ சங்கரா, பாரதி மகளிர் கல்லுாரி முறையே, மூன்று, நான்காம் இடங்களை பிடித்தன.
