தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஸ்போர்ட்ஸ் கார்னர்

ஸ்போர்ட்ஸ் கார்னர்


ADDED : அக் 30, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்லுாரி வாலிபால் போட்டி

கூடுவாஞ்சேரி: மென்ட் எவ்ரி இன்விசிபில் இயர்னிங் அமைப்பு மற்றும் விநாயக மிஷன் நிகர்நிலை பல்கலை சார்பில், மாநில அளவிலான வாலிபால் போட்டி, கூடுவாஞ்சேரியில் நேற்று மாலை தொடங்கியது. கல்லுாரிகளுக்கு இடையிலான இப்போட்டியில், இருபாலரிலும் தலா நான்கு அணிகள் மோதுகின்றன. மாலை நடந்த தொடக்க விழாவில், மாநில வாலிபால் சங்க செயலர் மார்டின் சுதாகர், செங்கல்பட்டு வாலிபால் சங்க செயலர் அழகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஹாக்கி: ரயில்வே – கடற்படை மோதல்

சென்னை: அகில இந்திய அளவில், ‘முருகப்பா கோப்பைக்கான ஹாக்கி போட்டி, எழும்பூரில் நடந்து வருகிறது. இன்று மாலை 4:00 மணிக்கு நடக்க உள்ள அரையிறுதி போட்டியில், இந்திய ரயில்வே – இந்திய கடற்படை அணிகளும்; மாலை 6:00 மணிக்கு பாரத் பெட்ரோலியம் – இந்திய ராணுவ அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us